38 நகரங்களில் ஏப் 1 முதல் செட் டாப் பாக்ஸ் இல்லாமல் 'டெட்' ஆகப் போகும் டிவிகள்!
நாட்டின் 38 நகரங்களில் செட் டாப் பாக்ஸ் வசதி இல்லாமல் எந்த சானலையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பார்க்க முடியாது. தற்போது நாட்டின் 67 சதவீத வீடுகளில் செட் டாப் பாக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும் கூட 38 நகரங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பெருமளவிலான டிவி பெட்டிகள் உறை நிலைக்குப் போகவுள்ளன. காரணம் இந்த டிவிகள் செட் டாப் பாக்ஸ் வசதியைப் பெறத் தவறி விட்டன என்பதால்.
அனலாக்குக்கு மூடு விழா
அனைத்து டிவி நிறுவனங்களும் ஏப்ரல் 1ம் தேதியன்று தங்களது அனலாக் சி்க்னல் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளன. எனவே அன்று முதல் டிஜிட்டல் வசதி கொண்ட சான்ல்களை மட்டுமே மக்கள் பார்க்க முடியும்.
ஆக்ரா - கோவை
இந்தியாவைப் பொறுத்தவரை ஆக்ரா, அகமதாபாத், அலகாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பெங்களூர், போபால், சண்டிகர், கோவை.
ஹைதராபாத் - மைசூர்
பரீதாபாத், காஸியாபாத், ஹவுரா, ஹைதராபாத், இந்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கல்யாண்-டோம்பிவிலி, கான்பூர், லக்னோ, லூதியானா, மீரட், மைசூர்.
நவி மும்பை - விசாகப்பட்டனம்
நாக்பூர், நாசிக், நவி மும்பை, பாட்னா, புனே, பிம்ப்பிரி சின்ச்வாட், ராஜ்கோட், ராஞ்சி, ஷோலாபூர், ஸ்ரீநகர், சூரத், தானே, வடதோரா, வாரணாசி, விசாகப்பட்டனம் ஆகிய நகர்களில் டிஜிட்டல் வசதி இல்லாத டிவிகளில் சானல் எதையும் பார்க்க முடியாது.
100 சதவீத டிஜிட்டல் மயமாக்கல்
இந்த நகரங்களைப் பொறுத்தவரை, ஹைதராபாத், அமிர்தசரஸ், சண்டிகர், அலகாபாத் ஆகிய நகரங்களில் 100 சதவீத டிஜிட்டலைசேஷன் முடிந்துள்ளதாம்.
தானே புனேவில் 75 சதவீதம்
ஜோத்பூர், தானே, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், புனே, பரீதாபாத், நாசிக், காஸியாபாத் ஆகிய நகரங்களில் 75 சதவீத அளவுக்கு முடிந்துள்ளது. மற்ற 28 நகரங்களில் பாதி அளவுக்கு முடிந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!