Thursday, March 28, 2013

ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்!


டச்சு நிறுவன திருவிளையாடல்.. ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்!


நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்குவதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பேம் ஊடுறுவலே இந்த மந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். ஸ்பேம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனிவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான ஸ்பேம்ஹவுஸ் என்ற அமைப்புதான் இந்த ஸ்பேம் ஊடுறுவலைக் கண்டுபிடித்து அதுகுறித்த எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், நெதர்லாந்தைச் சேர்ந்த சைபர் பங்கர் என்ற நிறுவனம்தான் இந்த ஸ்பேமை பரப்பியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது கருப்பு்ப பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த ஸ்பேம் ஊடுறுவலால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று ஸ்பேம்ஹவுஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பேம் தாக்குதலில் இதுவும் ஒன்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

இந்த ஸ்பேம் தாக்குதலால் இணையதள இணைப்பு வேகம் மகா மந்தமாகி விட்டது. எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், வீடியோக்களை அனுப்புவது, பார்ப்பது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த ஸ்பேம் தாக்குலால் லண்டன் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்சிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாம். இன்றும் பிரச்சினை தொடருகிறது. இருப்பினும் நேற்றைக்கு இன்று நிலைமை பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/28/world-spammer-on-black-list-slows-global-net-172344.html

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!