வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) வங்கிகளில் ரூ.62,708 கோடி சேமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். அவர்கள் உழைத்து வங்கிகள் மூலம் சேமித்து வைத்துள்ள தொகை 2012 டிசம்பர் கணக்குப்படி ரூ.62,708 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில், ஸ்டேட் வங்கி குழும வங்கிகளில் மட்டும் 40.58 சதவீதம் அதாவது ரூ.25,445 கோடி சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் கேரள என்ஆர்ஐ சேமிப்பு ரூ.23,395 கோடியாக உள்ளது. சிறு நகரங்களை சேர்ந்தவர்களின் சேமிப்பு 62.85 சதவீதமாகவும், நகரங்களை சேர்ந்தோரின் சேமிப்பு 31.34 சதவீதமாகவும், கிராமப்புறங்களை சேர்ந்தோர் சேமிப்பு 5.81 சதவீதமாகவும் உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் அதிகமாக ரூ.17,258 கோடியை என்ஆர்ஐகள் சேமித்துள்ளனர். தனியார் வங்கிகளை பொறுத்த வரையில் கேரளாவை தலைமையிடமாக கொண்ட பெடரல் வங்கியில் அதிகமாக ரூ.11,032 கோடி சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!