கருத்தடைக்கு பயன்படும் பரு ஒழிப்பு மாத்திரை
பிரான்சில் ஆண்டுதோறும் 20 இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளால் உயிரிழப்பதாக பிரான்ஸ் மருந்து துறை(France’s Medicines Agency) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் டயான்-35(Diane) என்ற கருத்தடை மருந்து வீரியம் மிக்கவையாகவும், ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகளை உருவாக்கி அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்ககூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
பிரான்சில் ஒவ்வொரு வருடமும் நாற்பத்திரண்டு லட்சம் பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
ஜேர்மனியைச் சேர்ந்த பேயர்(Bayer) நிறுவனம் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி முகத்தில் பரு உருவாகாமல் தடுக்க டயான்-35 என்ற மருந்தைத் தயாரித்தது.
இந்த மருந்து ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதால் கருமுட்டை உற்பத்தி ஆகாது என்று கருதி கருத்தடை மாத்திரையாகவும் மருத்துவர் பலர் பரிந்துரைத்தனர்.
ஆனால் இதன் மூலம் உண்டாகும் ஆபத்து காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் அரசு பரு ஒழிப்புக்கு தரும் என்ற டயான்-35 மருந்தை கருத்தடைக்குப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளது.
டயான்-35 என்ற பரு ஒழிப்பு மாத்திரை உலகளவில் 116 நாடுகளில் கரு ஒழிப்பு மாத்திரையாக விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!