சட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு
சீனாவிலிருந்து சுவிஸ் நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த லிப்ஸ்டிக் மற்றும் சிகரெட் லைட்டருக்குள் சட்ட விரோதமாக திரவம் நிரப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சோதனைக் கூடத்தில் இந்தக் குப்பியை சோதித்ததில் இதற்குள் இருப்பது கண்ணீரை வரவழைக்கும் விஷத் திரவம் என்பது தெரியவந்துள்ளது.
கண்ணீர் திரவத்தை 500 லிப்ஸ்டிக் மற்றும் லைட்டருக்குள் அடைத்துக் கடத்தி வந்ததை அறிந்த ஜெனீவா விமானநிலையத்தின் சுங்க அதிகாரிகள்அதிர்ச்சியுற்றனர். சுங்கத் துறை தகவல் தொடர்பாளரான மைக்கேல் பக்கர் இது போன்ற கடத்தல் சுவிட்சர்லாந்தில் நடந்திருப்பது இது தான் முதல் முறையென தெரிவித்துள்ளார்.
இந்த சிகரெட் லைட்டரைப் பயன்படுத்தி முகத்தில் இந்தத் திரவத்தைத் தெளிக்கலாம். இந்தத் தாக்குதலை எதிர்பாரத நபர் மயங்கி விழநேரிடும். அதன் பின்பு அவரைக் கொலை செய்வதோ, அவரிடம்மிருந்து கொள்ளையிடுவதோ எளிது என்று இதன் பயன்பாட்டை விளக்கிய சுங்கவரி அதிகாரி பக்கர், இவை பிடிபடாமல் இருந்திருந்தால் சுவிட்சர்லாந்துக்குள் சட்ட விரோமாக விற்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் ஆபத்துக் காலத்தில் மிளகாய்ப்பொடி தூவி திருடுவதும் உண்டு. சிலர் திருடர் மற்றும் கொலைகாரர்களிடமிருந்து இவ்வாறு தப்பிப்பதும் உண்டு. மிளகாய் பொடி தூவுவது சட்ட விரோதமான செயல் ஆகாது.
ஆனால் கண்ணீர்புகை அல்லது கண்ணீர் திரவப் பயன்பாடு என்பது சட்ட விரோமானதாகும். கண்களுக்கு எரிச்சலும் கண்களிலிருந்து கண்ணீரும் வரவழைக்கும் இந்த லிப்ஸ்டிக் அல்லது சிகரெட் லைட்டர் ஒவ்வொன்றுக்கும் சுங்க அதிகாரிகள் முந்நூறு ஃபிராங்க் வரை அபராதம் விதிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!