சீன பிரதமருக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்தா? பத்திரிக்கை செய்தியால் பரபரப்பு
சீன பிரதமர் வென் ஜியாபோவின் குடும்பத்தினர் சட்டவிரோதமாக 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, வென் ஜியாபோ குடும்பத்தினர் 1,500 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளனர்.
ஜியாபோவின் 90 வயதான தாய் யாங் ஜியுடன் தன்னுடைய வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
சீன நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு எந்த வருவாயும் இல்லாமல் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார் என்று சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இதற்கு ஜியாபோ குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்ட ஆலோசனைகள் வழங்கும் பாய் டவோ, வாங் வீடாங் ஆகிய 2 நிறுவனங்கள் ஜியாபோ குடும்பத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானவை. சீன பிரதமரின் குடும்பத்தினர் பலர் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை.
வர்த்தகத்தில் ஈடுபடும் சிலரும் எந்த நிறுவனத்திலும் பங்கு வைத்திருக்கவில்லை. அவர்கள் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளன.
இந்நிறுவனங்கள் மேலும் கூறுகையில், குடும்பத்தினரின் வர்த்தக நடவடிக்கையில் பிரதமர் ஜியாபோ எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. தன்னுடைய பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவும் அவர் அனுமதிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!