கருக்கட்டமல் இருக்க இலவச ஊசியா? பெற்றோர் அதிர்ச்சி !!!
பிரித்தானிய பள்ளிகள், கருக்கட்டாமல் செக்ஸ் செய்ய உதவும் நிலையங்களாக மாறிவருகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. காரணம் பிரித்தானியாவில் சுமார் 13 வயது மாணவிகளுக்கு கூட கருக்கட்டாமல் இருக்கும் ஊசியையும் சில சாதனங்களையும் பள்ளிகள் இலவசமாக வழங்குகின்றனவாம். இது கடந்த ஆண்டை விட சுமார் 900 மடங்கு அதிகரித்துள்ளது என்று தற்போதை கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால், இந்த ஊசியை அல்லது குறிப்பிட்ட ஒரு சின்ன சாதனத்தை மாணவிகள் பாவிக்கிறார்களா என்பது குறித்து அவர்கள் பெற்றோர் கூட அறிந்துகொள்ள முடியாதாம். இது பள்ளிக்கூடத்தில் நடக்கும் சுகாதாரசேவை திணைக்களத்தால் கையாளப்படுகிறதாம். பிரித்தானியாவில் உள்ள 13 தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் அதிகளவில் கருத்தரிப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மாணவர்களுடன் செக்ஸில் ஈடுபட்டு, கருத்தரிக்காமல் இருக்க அவர்களுக்கு பள்ளியில் ஊசி போடப்படுகிறது. மற்றும் ஊசிபோடப் பிடிக்காதவர்கள் ஒரு சிறிய சாதனத்தை பெண்களின் அந்தரங்க உறுப்பினுள் செலுத்தினால் போதுமாம். அவர்கள் எந்த ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கருத்தரிக்க மாட்டார்களாம். இச் செய்தியை அறிந்த பல பெற்றோர் தமது பிள்ளைகளில் யாராவது இவ்வாறு ஊசி போட்டுள்ளார்களா என்று பாடசாலை நிர்வாகத்தைக் கேட்டுள்ளார்கள். இருப்பினும் அது அவர்களின் தனிப்பட்ட விடையம் இதில் பெற்றோர் தலையிடவேண்டாம் என்று, பாடசாலை தாதிமார் கூறிவிட்டார்கள்.
பிரித்தானியப் பாடசாலைகள் இவ்வாறு நடந்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பள்ளிக்கூடங்கள் கருத்து தெரிவித்துள்ளது. தற்செயலாக மாணவிகள் ஒருவரோடு உடலுறவுகொண்டால், அவர்கள் கருதரிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தாம் இப்படிச்செய்வதாக பள்ளிக்கூடங்கள் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் மறு புறத்தில் மாணவிகள் மிகவும் துணிச்சலாக உடலுறவில் ஈடுபட இது உதவுவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!