Friday, November 16, 2012

சுனிதா தலைமையிலான குழுவினர் 19ம் திகதி பூமி வருகை

சுனிதா தலைமையிலான குழுவினர் 19ம் திகதி பூமி வருகை





அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 47) தலைமையிலான குழுவினர் வருகிற 18ம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து பூமிக்கு திரும்புகின்றனர்.
இக்குழுவினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

சுனிதா தலைமையிலான இக்குழுவில் அவருடன் அகி ஹோசிடே (ஜப்பான்), யூரி மலென் சென்கோ (ரஷியா) ஆகிய விண்வெளி வீரர்களும் சென்றனர்.

இவர்கள் கஜகஸ்தானில் இருந்து ரஷ்யாவின் சோயுஷ் டி.எம்.ஏ.05.எம் என்ற விண்கலத்தில் சென்றனர்.

இவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வுகூடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் நடந்து எந்திரங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு அவர்களின் பணி முடிந்தது.

எனவே, சுனிதா வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர் வருகிற 18ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்து சோயுஷ் விண்கலம் மூலம் புறப்படுகின்றனர்.

பின்னர், இவர்களது விண்கலம் மறுநாள் திங்கட்கிழமை (19ம் திகதி) கஜகஸ்தானில் உள்ள விண்வெளி தளத்தில் தரையிறங்குகிறது.

எனவே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த பெண் விண்வெளி வீரர் என்ற உலக சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!