லண்டன் புறநகர்ப்பகுதியில் இந்திய சினிமா பாணியில் திருட்டு !
லண்டனில் உள்ள புறநகர்ப் பகுதியான ஈஸ்ட்காம் பகுதியில் சில வினோதமான திருட்டுகள் நடக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. காரை உடைத்து டாம் டாம்மை களவாடுவது, வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடிப்பது என்பது வழமையாக நடக்கும் விடையம். ஆனால் வீட்டிற்கு முன்னால் நிற்க்கும் காரில் இருந்து பெற்றோலைத் திருடும் செயல்களை நாம் இந்திய சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம். இது தற்போது லண்டனில் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துள்ளது என்றால் நம்புவீர்களா ? நம்பித் தான் ஆகவேண்டும் ! நேற்றைய தினம் தமிழர் ஒருவர் வழமைபோல காலை எழுந்து வேலைக்குச் செல்ல காரை ஸ்டாட் செய்துள்ளார். கார் ஸ்டாட் ஆகவில்லை, ஆனால் பெற்றோல் முடிவடைந்துவிட்டதாக முள்ளுக்கம்பி காண்பித்துள்ளது. இவர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். காரணம், வார இறுதியில் தான் இவர் முழு டாங் பெற்றோல் அடித்திருந்தார்.
தனது காரில் ஏறுவதற்கு முன்னதாக, வீதியில் சற்று பெற்றோல் வாசனை வருவதை ஏற்கனவே உணர்ந்திருந்த அவர், காரின் பின்புறத்தை பார்வையிட்டுள்ளார். பின்னர் அதனை அருகில் உள்ள திருத்தும் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னரே, பெற்றோல் டாங்கில் 3 துளைபோட்டு அதில் இருந்த முழுப் பெற்றோலையும் யாரோ திருடிய விடையம் தெரிந்துள்ளது. சரி இது எப்படி பெற்றோல் திருட்டு என்று கூறமுடியும் ? யாரவது வேண்டும் என்று செய்திருக்கலாம் தானே என்ற வாதங்களும் இங்கே எழக்கூடும். ஆனால் குறிப்பிட்ட அதே இடத்தில் உள்ள வாகனத் திருத்த நிலையத்திடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு வந்துள்ளது.
அவை அனைத்திலும் இவ்வாரு துளைகள் போட்டு பெற்றோல் திருடப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது. இருக்காதா பின்ன ? தங்கம் விக்கிற விலைமாதிரி பெற்றோல் விலையும் லண்டனில் அபரிவிதமாக அதிகரிச்சிருக்கே ! பின்னர் அதனைத் திருடாமல் விடுவார்களா திருடர்கள் என்று மனம் நொந்துகொள்கிறார்கள் தமிழர்கள். காரை உடைத்தால் தான் எலாம் சத்தம் போடும். ஆனால் மெல்லியதாக துளைபோட்டு பெற்றோலை எடுத்தால் அது என்ன சத்தம் போடவா போகுது ? நாளை காலை நீங்கள் வேலைக்கு போகும்போது, உங்கள் காருக்கும் இது நடக்கலாம் ! எனவே மக்களே ஜாக்கிரதை !
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!