16.9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டு உலக சாதனை படைத்த வைரம்
உலகில் உள்ள அரிய வகை மற்றும் மிகவும் புகழ்பெற்ற வைரங்கங்களில் ஆர்ச்டியூக் ஜோசப் வைரமும் ஒன்று.
இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட 76 கேரட் வைரமான ஆர்ச்டியூக் ஜோசப், சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் நேற்று இரவு ஏலம் விடப்பட்டது. அப்போது இந்த வைரம் 16.9 மில்லியன் யூரோவுக்கு (ரூ.118 கோடி) ஏலம் போனது.
வைர வர்த்தகத்தில் கோல்கொண்டா வைரம் உலக சாதனை படைத்திருக்கிறது. இதன் தரம் கோஹினூர் வைரத்துடன் ஒப்பிடத்தக்க அளவிக்கு சிறப்பாக உள்ளது என்று ஏல நிறுவனத்தின் அதிகாரி பிரான்சியஸ் குரியல் தெரிவித்தார்.
இந்த சாதனை வைரம், முதலில் ஹங்கேரி மன்னர் ஆர்ச்டியூக் ஜோசபிடம் இருந்தது. இதனால் அவரது பெயரே இந்த வைரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!