Thursday, November 15, 2012

குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஒபாமா அறிவிப்பு

குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஒபாமா அறிவிப்பு





அமெரிக்காவில் குடியேறுவோர் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஒபாமா தலைநகர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, குடியேற்ற விதிகளில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும் என்றும் இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு செய்தார்.

இந்த மாற்றங்களின் போது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் அமெரிக்காவின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

முறையாக ஆவணங்களை வைத்திருக்காத தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடிய வகையில் இம்மசோதா இருக்கும் என்றார்.

இந்தியா போன்ற வெளிநாட்டவரின் திறமையை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நன்கு கல்வி கற்ற ஒருவர் இங்கேயே தொழில் தொடங்க ஊக்கப்படுத்துவோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!