12 மில்லியன் ஆப்பிள் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட்டுகளை அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ யின் லாப்டொப் ஒன்றில் இருந்து ஹாக்
அப்பிள் நிறுவனத்தின் யூசர் நேம், மற்றும் பாஸ்வேட்டுகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஒரு குழு அறிவித்துள்ளது. அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான(மக்களுடைய) தகவல்களை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மில்லியன் மக்களுடைய ஐடி மற்றும் அவர்கள் தொடர்பான டேட்டாக்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ யின் லாப்டொப் ஒன்றில் இருந்தே தாம் இத்தகவல்களைப் பெற்றுள்ளோம் என ஹக்கிங் குழு தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐ பாட் மற்றும் அப்பிள் கணணிகளை மக்கள் வாங்கிப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, முதலில் தமது தரவுகளை ரெயிஸ்டர் செய்யவேண்டும். இவ்வாறு ரெஜிஸ்டர் செய்யும் தரவுகள் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய கணணியில் சேமித்துவைக்கப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களையே தாம் தற்போது கைப்பற்றியுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். எப்.பி.ஐ அதிகாரியான கிருஸ்டபரின் லாப்டொப்பில் இருந்தே தாம் இத் தகவல்களைப் பெற்றதாக இக் குழு பகிரங்கமாக அறிவித்துள்ளது. அது சரி அப்பிள் நிறுவனத்தின் தரவுகளை ஏன் உளவு நிறுவனமான எப்.பி.ஐ அதிகாரிகள் வைத்திருந்தனர் என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் இரகசியத் தரவுகளை எப்.பி.ஐ யினர் தமது கணணியில் வைத்திருந்ததும் போதாது என்று, இத்தகவல்கள் வெளியாகவும் இவர்களே காரணமாக அமைந்துள்ளார்கள். அப்பிள் நிறுவனத்திற்கு தெரிந்து தான் இத்தகவல்கள் பெறப்பட்டதா இல்லை இரகசியமாக எப்.பி.ஐயினர் சுட்டனரா என்று தெரியவில்லை என்கிறார்கள் விடையமறிந்த வட்டாரத்தினர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!