Wednesday, September 5, 2012

பிரிட்டன்: வீடற்றவர்கள் காலி வீட்டுக்குள் நுழைந்து வசிப்பது இனி குற்றம்


பிரிட்டன்: வீடற்றவர்கள் காலி வீட்டுக்குள் நுழைந்து வசிப்பது இனி குற்றம்





காலியாக இருக்கும் ஒரு வீட்டில் வீடற்றவர்கள் நுழைந்துகொண்டு அங்கு இலவசமாக வசிக்கும் செயல் பிரிட்டனில் பெரும்பான்மையான இடங்களில் இன்று முதல் கிரிமினல் குற்றமாகிறது.


இலவசமாக வசிப்பவர்கள் எதிராக சிவில் வழக்கு மட்டும்தான் தொடுக்க முடியும் என்ற நிலை இதுநாள் வரை இருந்துவந்தது.

ஸ்குவாட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இப்படியான ஆட்களுக்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டி இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

விடுமுறைக்காக வீட்டைப் பூட்டி வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டுக்குள் மற்றவர்கள் புகுந்துகொண்டு உரிமையாளர்களை வீதியில் நிற்கவைத்த பல சம்பவங்கள் ஊடகங்களில் பெரிதும் அடிபட்டிருந்தன.

லட்சக்கணக்கான வீடுகள் காலியாக கிடக்க பலவீனமான நிலையில் உள்ள மக்கள்தான் கஷ்டப்படுவார்கள் என வீடற்றோர் நலனுக்கான உதவி அமைப்புகள் கூறுகின்றன.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!