Monday, September 3, 2012

கியூபெக்கில் நீரினால் பரவும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்


கியூபெக்கில் நீரினால் பரவும் காய்ச்சல்: அச்சத்தில் பொதுமக்கள்





கனடாவின் கியூபெக் மாகாணத்தில் Legionnaires என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் காய்ச்சலுக்கு இதுவரையிலும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோயின் தாக்குதல் குறித்து கியூபெக் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் இந்த நுண்ணுயிரியின் தாக்குதலை அறிய பத்து நாட்களாகும் என்பதாலும் அதிகாரிகளிடம் இத்தகைய தயக்கம் காணப்படுகின்றது.

கடந்த ஜீலை மாதம் பரவத் தொடங்கிய இந்த நுண்ணியிரி இதுவரை 165 பேரை தாக்கியுள்ளது.

இதே போன்று சிகாகோவில் ஜே.டபிள்யூ மரியாட் விடுதியின் தண்ணீர் தரம் குறைந்ததால் இந்த நுண்ணுயிரி தோன்றிப் பரவியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விடுதியில் உள்ள ஒரு செயற்கை நீரூற்றிலிருந்து நோய்க்கிருமி பரவியுள்ளது. உடனே அந்த விடுதியில் இருந்த தண்ணீரை மொத்தமாக வெளியேற்றி சுத்திகரித்து புதிதாக தண்ணீரை நிரப்பினர்.

மேலும் இந்த நுண்ணுயிரி தேங்கி கிடக்கும் நீரிலும் உற்பத்தியாக பரவுகிறது. இந்த நோய்த்தொற்று, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களிடம் மட்டுமே நோயை ஏற்படுத்துகிறது.

இதனால் கியூபெக்கின் சுகாதாரத்துறை அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் சுத்திகரிப்புப் பணியை மேற்கொண்டனர்.

கியூபெக் நகராட்சித் தலைவர் ஜீன் கேரஸ்ட், நோய்த் தடுப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!