Friday, September 7, 2012

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 43 பேர் பலி-20,000 வீடுகள் தரைமட்டம்


சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 43 பேர் பலி-20,000 வீடுகள் தரைமட்டம்


 

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 43 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த யுனான் மற்றும் ஜூஷூயூ மாகாணங்களில் இன்று காலை 11 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 4.8 முதல் 5.6 வரை ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கிய 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 43 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை தொடர்ந்து, 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் இருந்த மக்கள், தெருவில் குவிந்தனர். மேலும் கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நிலநடுக்கத்தை உணர்ந்த ஒருவர் கூறியதாவது,
நான் சாலையில் நடந்து சென்று போது நிலப்பகுதி அதிர்வதை உணர்ந்தேன். நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெருவில் இங்கும் அங்குமாக ஓடினர். சீனாவின் தென் கிழக்கு பகுதிகளில் உள்ள வீடுகள் குறைந்த வசதியுடன் காணப்படுகின்றன. மேலும் இங்கு மலைப்பகுதிகள் அதிகம் உள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!