Thursday, September 6, 2012

ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதப்பொதி


46 ஆண்டுகளுக்கு பின்பு ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதப்பொதி இந்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு



ஆல்ப்ஸ் மலைத் தொடரில் 46 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விழுந்த இடத்தில் இந்தியாவின் கடிதப்பொதி ஒன்று கிடைத்தது.

1966ம் ஆண்டு ஜனவரி 26 ம் திகதி ஏர் இந்திய விமானம் மும்பையில் இருந்து நியூயோர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 117 பயணிகளும் பலியாகினர். இறந்தவர்களில் இந்தியாவின் முன்னணி வாய்ந்த அணு விஞ்ஞானியான ஹோமி ஜே பாபா என்பவரும் உள்ளார். (இவர் இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என அறியப்படுபவர் )

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்கு பின்பு அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சிலர், இப்பொதியை கண்டுபிடித்தனர்.



இந்நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை பாரிஸில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளில் ஒருவரான சத்வந்த் கனாலியா என்பவர் பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து இந்த கடிதப் பொதியை பெற்றுக் கொண்டார்.

விமானத்தின் உள்ளே இருந்த முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதங்களைக் கொண்டிருக்கும் பொதி என்று இது கருதப்படுகிறது.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!