உடலின் சமநிலையை அதிகரிக்கும் ரெட் வைன்
உடலுக்கு தகாத பானமாக கருதப்படும் மதுபானங்களும் சில சந்தர்ப்பங்களில் அதே உடலுக்கு மருந்தாக அமைந்துவிடுகின்றன.
அதன் அடிப்படையில் ரெட் வைன் மூலம் உடலின் சமநிலைத்தன்மையை (Balance) பேணும் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருமையான வெளிப்புறத் தோல்களைக் கொண்ட பழங்களில் செய்யப்படும் ரெட் வைனை நாள் ஒன்றிற்கு 7 கிளாஸ் அருந்துவதன் மூலம் இச்சமநிலை மேம்பாடு கிடைக்கப்பெறுகின்றது என்றும் இதனால் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களால் கூட சமநிலையைப் பெற்று சிறப்பாக செயற்பட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நகரான பிற்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக பேராசியரான Dr Jane Cavanaugh என்பவரின் தலமையில் இடம்பெற்ற ஆய்வின்போது இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!