டார்க் சாக்லேட் இதயத்திற்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது : ஆய்வில் தகவல்
வயதானவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேசமயம் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதோடு மறதிநோய் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள். தினசரி சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறதாம். இதற்கு காரணம் இதில் உள்ள ப்ளேவனாய்டுகள், சாக்லேட்டில் உள்ள கோகோவும் மூளையின் சுறுசுறுப்பு திறனை அதிகரிக்கிறதாம்.
ப்ளேவனாய்டுகள் கோகோ, ரெட் ஒயின், திராட்சை, ஆப்பிள், டீ போன்றவைகளில் காணப்படுகின்றன. லேசான ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 90 வயது முதிர்ந்த நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ப்ளேவனாய்டுகள் அடங்கிய உணவுப்பொருட்கள் 8 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர்களின் நினைவுத்திறன் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் 70 சதவிகிதம் அளவிற்கு நினைவுத்திறன் அதிகரித்தது கண்டறியப்பட்டது.
அதேபோல் லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவந்துள்ளது. யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின. ஆய்வின் முடிவில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!