Monday, August 20, 2012

வியட்னாம் புயலால் சேதமடைந்துள்ள பயிர் நிலங்கள்


வியட்னாம் புயலால் சேதமடைந்துள்ள பயிர் நிலங்கள்





வியட்னாம் நாட்டைத் தாக்கிய சூறாவளி புயலால் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

வியட்னாம் நாட்டின் பேக் ஜியாங் மாகாணத்தை கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால், ஹனோய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாலைகளில் சாய்ந்தன.

புயலைத் தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேரும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேரும் பலியாகினர் 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

23 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பயிர்கள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணியில் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 11 ஆயிரம் படகுகளும், சில ஹெலிகாப்டர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!