பிரிட்டன் கோடீஸ்வரரில் இந்தியர்கள் 22 சதவீதம்
பிரிட்டனில் வசிக்கும் 15 மெகா பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் இந்தியர்கள் 22 சதவீதத்தை கொண்டுள்ளனர். ரஷ்யர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள வெல்த்,எக்ஸ் குழுமம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் 15 மெகா பணக்காரர்கள் பட்டியலை வெல்த்,எக்ஸ் வெளியிட்டது. இதில் இந்தியரான ஸ்டீல் தொழில் ஜாம்பவானான ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் 1,580 கோடி டாலர் (டாலர் 55) செல்வ வளம் கொண்டவராக இரண்டாமிடத்தை வகிக்கிறார்.
ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபரும், இங்கிலிஷ் கால்பந்து கிளப் பங்குதாரருமான பர்கனோவிச் உஸ்மனோவ் 1,640 கோடி டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் 760 கோடி டாலர் சொத்துடன் 9வது இடத்திலும், ஸ்ரீசந்த் குழுமத்தைச் சேர்ந்த கோபிசந்த் 600 கோடி டாலருடன் 12வது இடத்தையும் வகிக்கின்றனர். பிரிட்டனின் டாப் 15 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 13,330 கோடி டாலர். இதில் 3 இந்தியர்களின் சொத்து மட்டும் 22 சதவீதமாக உள்ளது.
|
RANK |
NAME |
Value (US $ Billion) |
1 |
Alisher Burkhanovich Usmanov |
16.4 |
2 |
Lakshmi Niwas Mittal |
15.8 |
3 |
Roman Abramovich |
12.1 |
4 |
Duke of Westminister, Gerald Cavendish Grosvenor |
11.1 |
5 |
Leonard Valentinovich Blavatnik |
9.5 |
6 |
John Fredrikesen |
9.3 |
7 |
Hans Rausing |
9.1 |
8 |
Willard Gordon Galen Weston |
8.4 |
9 |
Srichand Hinduja |
7.6 |
10 |
Charlene de Carvalho-Heineken |
6.9 |
11 |
Nicholad Oppenheimer |
6.8 |
12 |
Gopichand Hinduja |
6.0 |
13 |
Sir Richard Branson |
5.0 |
14 |
David Reuben |
4.7 |
15 |
Earl Cadogan Charles Cadogan |
4.6 |
|
|
Wealthx Exclusive Intelligent report
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!