Thursday, January 2, 2014

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்க சென்ற சீன கப்பலும் ஐஸில் சிக்கியது!

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்க சென்ற சீன கப்பலும் ஐஸில் சிக்கியது!



2 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 22 மாலுமிகளுடன் கடல் நடுவே ஐஸ்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலில் உள்ளவர்கள், ஐஸ்கட்டிகளுக்கு நடுவே புத்தாண்டை கொண்டாடினார்கள். இவர்களது கப்பலை பனிக்கட்டிகளுக்கு வெளியே இழுத்து மீட்கும் முதலாவது முயற்சி தோல்வியடைந்தது பற்றி எழுதியிருந்தோம்.

இப்போது 2-வது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

இப்போது நிலைமை முன்பைவிட மோசமாகி விட்டது. எப்படியென்றால், கப்பலை பனிக்கட்டிகளுக்கு வெளியே இழுப்பதற்கு போன கப்பலும், அதே பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது. இப்போது இரண்டு கப்பல்களையும் மீட்க வேண்டியுள்ளது.

இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன என எழுதியிருந்தோம். அவற்றில் முதலாவதாக அங்கு சென்றடைந்த ஆஸ்திரேலிய கப்பலான அவுரோரா அவுஸ்திரேலிஸ், ரஷ்யக் கப்பலை சூழ்ந்துள்ள ஐஸ் கட்டிகளை உடைக்கும் முயற்சியில் இறங்கியபோது வெற்றி பெறவில்லை.

கடல் கொந்தளிப்பும், வேகமாக காற்றும் சேர்ந்து ஆஸ்திரேலிய கப்பலை ஐஸ் கட்டிகளுக்குள் தள்ளிவிடக்கூடிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து, ஆஸ்திரேலிய கப்பலின் கேப்டன் முர்ரே டோய்ல், மீட்பு முயற்சியை கைவிட்டு, தமது கப்பலை 2 கடல் மைல்கள் பின்வாங்க செய்து, அங்கேயே காத்திருந்தார்.

இந்த நிலையில்தான் இரண்டாவது மீட்புக் கப்பல் அங்கு வந்து சேர்ந்தது. இது சீனாவின் கப்பல். இதுவும் ஐஸ்கட்டிகளை உடைக்கும் திறன்கொண்ட ஐஸ்பிரேக்கர் கப்பல்தான். சீனக் கப்பலின் பெயர், சூ லொங் (அர்த்தம், பனி ட்ராகன்).

இந்தக் கப்பல் ரஷ்ய கப்பலை நெருங்க முயன்றது. சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு ஐஸ் கட்டிகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய சீனக் கப்பல், அதற்குமேல் முன்னேற முடியவில்லை. பலத்த முயற்சியின் பின் இனியும் முன்னே செல்ல முடியாது என்று தெரிந்துவிட்ட நிலையில் சீனக் கப்பல் திரும்பி வர முயன்றபோது, அதுவும் முடியவில்லை.

காரணம், மீட்கச் சென்ற சீனக் கப்பலும் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது (5-வது போட்டோவை பார்க்கவும்).

இப்போது ஒரே வழி, ஹெலிகாப்டர் மூலம் முதலில் சிக்கிய ரஷ்யக் கப்பலில் இருந்தவர்களையும் மீட்க வேண்டும். அதை மீட்கச் சென்ற சீனக் கப்பலில் உள்ளவர்களையும் மீட்க வேண்டும். தமது கப்பலுக்கு எதிரேயுள்ள ஐஸை சீனக் கப்பலின் கேப்டன் சுட்டிக் காட்டுவதை 6-வது போட்டோவில் பார்க்கவும்.

ரஷ்யக் கப்பலில் உள்ளவர்களுக்கு, சூழ்நிலையின் தீவிரத்தையும், மீட்பு பணியின் புரோகிரஸ் பற்றியும் விளக்கம் அளிக்க கப்பலுக்கு உள்ளே பிரீஃபிங் கூட்டங்கள் தினமும் நடைபெறுகின்றன (3-வது போட்டோ). கடல் நடுவே, பனிக்கட்டிகளுக்கு மேலே ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் (ஹெலிபேட்) ஒன்றை அமைப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுகிறது.

பனிப் பாறைகளுக்கு நடுவே கப்பல் தென்படுவதை 1-வது போட்டோவில் தொடங்கி, பனிக் கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட பயணிகள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு போட்டோவாக பார்க்கவும். சாதாரண கடல் பயணங்களின்போது காண முடியாத, வித்தியாசமான காட்சிகள் இவை.














No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!