Tuesday, December 31, 2013

டெல்டா ஏர்லைன்ஸ் இணையம் சொதப்பியது! நம்ப முடியாத மலிவு விலை டிக்கெட்டுகள்!!

டெல்டா ஏர்லைன்ஸ் இணையம் சொதப்பியது! நம்ப முடியாத மலிவு விலை டிக்கெட்டுகள்!!



அமெரிக்க விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்ஸின் இணையதளத்தில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணிவரை (அமெரிக்க கிழக்கு நேரம்) புக்கிங் செய்ய முயன்றவர்கள் அதிஷ்டசாலிகள். கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக, நம்பவே முடியாத மலிவு விலைகளில் டிக்கெட் கட்டணங்கள் டிஸ்பிளே ஆகின.

எவ்வளவு மலிவு?

பால்டிமோரில் இருந்து ஹவாய் தீவு ஹொனலூலு செல்ததற்கு முதல் வகுப்பு கட்டணமே, 99 டாலர்கள் என்ற அளவில் மிக குறைந்த கட்டணங்கள். பல அமெரிக்க நகரங்களுக்கு இடையே கட்டணம், 9.99 டாலர் முதல், 19.99 டாலர் வரை காண்பிக்கப்பட்டதில், பயணிகள் திகைத்துப் போயினர்.

பலர் உடனே பாய்ந்து, புக்கிங்கும் செய்து விட்டனர்.

இதற்கிடையே டெல்டா ஏர்லைன்ஸின் இணையதளத்தில் கோளாறு பற்றி பலர் பேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள, டெல்டா ஏர்லைன்ஸ் பக்கமே திரும்பாத பலரும்கூட, டெல்டா இணையதளத்துக்கு படையெடுத்தனர். மலிவு விலை டிக்கெட்டுகளை வாரிக் கொண்டனர்.

மதியம் 12 மணிவரை இந்த கட்டணங்கள் டிஸ்பிளே ஆகிக்கொண்டு இருந்தன. அதன்பின்தான் விஷயத்தை புரிந்துகொண்டது டெல்டா ஏர்லைன்ஸ். உடனடியாக இணையத்தில் இருந்த தவறு சரி செய்யப்பட்டது. அதுவரை 99 டாலருக்கு டிஸ்பிளே ஆகிக்கொண்டிருந்த டிக்கெட் கட்டணங்கள், திடீரென 799.00 ஆகின.

டெல்டா தலைமையகத்தில் யாரோ ஒரு ஜூனியர் புரோகிராமர் செய்த தவறால் இந்த மலிவு விலை கட்டணங்கள் டிஸ்பிளே ஆகின என டெல்டாவில் பணிபுரியும் சிலர் சொல்கிறார்கள். அதுவும் சரிதான். சீனியர்கள் எல்லோருக்கும் கிருஸ்துமஸ் டே-ஆஃப் கிடைக்க, ஜூனியர்கள் பணி புரிந்திருப்பார்கள்!

இந்த இரண்டு மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் மலிவு விலை டிக்கெட்டுகளை புக்கிங் செய்து விட்டிருந்தனர். அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் பயணத்துக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என இன்று அறிவித்துள்ளது டெல்டா ஏர்லைன்ஸ். (அமெரிக்க கான்ஸ்யூமர் சட்டம் அப்படி! (Airlines to honor any mistake fares offered)

ஆமா.. நம்ம டெல்டா ஏர்லைன்ஸ் சகாக்கள் அந்த இரு மணி நேரமும் கிருஸ்துமஸ் பார்ட்டி ஓவரான நிலையில் இருந்தார்களா? அல்லது, ஓவர் பார்ட்டியிங்கில் இருந்தார்களா? (புத்தாண்டு தினம் ஜனவரி 1-க்கு ஏதாவது திட்டம் உள்ளதா டெல்டா நண்பர்களே?)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!