Friday, September 20, 2013

வீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...

வீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா? அதை போக்க இதோ சில டிப்ஸ்... 


வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் செல்லப் பிராணிகள், வீட்டின் பல இடங்களில் சிறுநீர் கழித்துவிடும். இவ்வாறு செல்லப் பிராணிகளின் சிறுநீரின் துர்நாற்றமானது, வீட்டிலேயே இருக்க முடியாதவாறான நிலையை ஏற்படுத்தும். 

இத்தகைய சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்க எவ்வளவு தான் ரூம் ப்ரஷ்னர் அடித்தாலும், நன்கு சுத்தப்படுத்தினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மட்டும் எப்போதும் நீங்காமல் இருக்கும். எனவே இத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடைபெற வேண்டுமானால், ஒருசில எளிமையான மற்றும் வாசனை நிறைந்த பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், நிச்சயம் நாயின் சிறுநீர் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். 

அதுமட்டுமின்றி, அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. சரி, இப்போது அந்த துர்நாற்றத்தைப் போக்க பயன்படும் பொருட்களைப் பார்ப்போமா!!!


ஆரஞ்சு தோல் 

ஆரஞ்சு பழத்தின் தோலில் நல்ல நறுமணம் நிறைந்துள்ளது. எனவ இந்த ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு, நாயின் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு ஆரஞ்சுப் பழத்தின் தோலை அந்த இடத்தில் சில மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்தில் ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து சாறு எடுத்து, தெளிக்கலாம்.


எலுமிச்சை 

எலுமிச்சை ஒரு சிறந்த நேச்சுரல் ரூம் ப்ரஷ்னர். எனவே இந்த எலுமிச்சையின் தோலை சிறுநீர் நாற்றம் வரும் இடத்தில் தூவி, 30 நிமிடம் ஊற வைத்தால், துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.


வினிகர் 

வீட்டின் உள்ளே நாய் சிறுநீர் கழித்துவிட்டால், உடனே நல்ல சுத்தமான துணியால் துடைத்து, பின் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த நீரால், அவ்விடத்தை துடைத்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.


போராக்ஸ் 

நாயின் சிறுநீர் கார்பெட்டில் கறையாக படிந்திருந்தால், அதனை போக்குவதற்கு போராக்ஸ் பயன்படுத்த வேண்டும். அதுவும் அந்த கார்பெட்டில் சிறிது போராக்ஸை தெளித்து, ஸ்பாஞ்ச் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் கறையானது எளிதில் போய்விடும்.


பேக்கிங் சோடா 

பேக்கிங் சோடா பல பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதில் ஒன்று தான் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்குவது. அதிலும் இது சிறுநீர் துர்நாற்றத்தை மட்டுமின்றி, கறைகளையும் போக்க வல்லது.


சுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி 

பொதுவாக வீட்டின் உள்ளே நாய் சிறுநீர் கழித்தால், உடனே ஈரமான துணியைக் கொண்டு வந்து துடைப்போம். ஆனால் அவ்வாறு ஈரமான துணி கொண்டு துடைத்தால், துர்நாற்றம் பரவச் செய்யுமே தவிர, நீங்காது. ஆகவே நல்ல சுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி கொண்டு துடைக்க வேண்டும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!