பூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்டவெளியில் ஒலிபரப்பான இந்திய இசை!
36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரிய குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம், அந்த 'ஆழ்நிசப்த' மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிபரப்பியுள்ளது.
சூரிய மண்டலத்தைத் தாண்டிச் சென்றுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வாயேஜர் 1, வாயேஜர் 2:
வெறுமையான இந்த அண்டவெளியை (Interstellar space) அயனி நிலையிலான (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் துணை அணு துகள்கள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் நிரப்பியுள்ளன. வாயேஜர்-1 விண்கலத்துடன் சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.சூரியனின் கோள்களின் ரகசியங்களை கண்டுபிடித்துவிட்டு...
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை சுற்றிவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது இந்த அண்டவெளியை அடைந்துள்ளன.இந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலை, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன.
கார்ல் சாகன்...
நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்கள், நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வது, மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியது என்ற உண்மையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.அமெரிக்காவின் முன்னணி விண்ணியலாரான கார்ல் சாகன் தலைமையில் தான் இந்தத் திட்டம் உருவானது. அப்போது அண்டவெளியில் ஒலிபரப்ப உலகம் முழுவதும் இருந்தும் பல இசைகள் தேர்வு செய்யப்பட்டன.
ஹிந்துஸ்தானி இசை...
இதில் இந்தியாவில் இருந்து கேசர் பாய் கேர்கர் பாடிய 'Jaat kahan ho' என்ற ஹிந்துஸ்தானி பாடலை தேர்வு செய்தார் கார்ல் சாகன். கேசர் பாய் கேர்கர் கோவாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது பூமியில் இருந்து 18,783,364,273 கி.மீ. பயணித்துவிட்ட வாயேஜர்-1 இந்தப் பாடலை சமீபத்தில் ஒலிபரப்பியது. அதாவது பூமியில் இருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பானது.வாயேஜர் இப்போ எங்கே இருக்கு?:
வாயேஜர்- 1 கடந்து கொண்டிருக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!