கம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை
அமெரிக்காவில் செயல்படும் யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறால் விமான டிக்கெட்டுகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏதோ கோளாறு ஏற்பட்டது.
இதனால் கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. கம்ப்யூட்டர் கோளாறால் விமான டிக்கெட்டுகள் கட்டணமில்லாமலும், மிகக் குறைந்த கட்டணத்திற்கும் ஆன்லைனில் கிடைத்தன. பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டும் கட்ட வேண்டி இருந்தது. இந்த கோளாறு குறித்து அறிந்த விமான நிறுவனம் தனது இணையதளத்தை நேற்று மூடியது.
மேலும் கட்டணமில்லாமல் மற்றும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைவரும் அந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹவாய் மற்றும் லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பிரபல இடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Join with us on Facebook >>>
அறிவியல்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!