லண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார்.
இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
அன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு டெலிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார்.
இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.
Join with us on Facebook >>>
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!