அடக் கடவுளே! இந்தியர்களுக்கு கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறதாமே...
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இந்தியாவில் பக்திமான்கள் குறைந்து வருகிறார்களாம்.
5 கண்டங்களில், 57 நாடுகளில், மொத்தம் 51,927 பேரிடம், நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளதாம். ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 1000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டதாம். அதில் பெரும்பாலும் மனிதர்களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து வருவதே தெரிய வந்துள்ளதாம்.
இந்தியாவுல...
2005ல் எடுக்கப்பட்ட சர்வேயில் 87% பேர் கடவுள் நம்பிக்கையோடு இருப்பதாக தெரிவித்திருந்தார்கள். அதுவே, 2013ல் 81% மாக குறைந்துள்ளதாம். அதாவது, கடந்த 7 வருடத்தில் மட்டும் 6% கடவுள் நம்பிக்கை இந்தியர்களுக்கு குறைந்துள்ளதாம்.
நாத்திகவாதிகள்...
அதுபோல, 2005ல் 4%மும், 2012ல் 3%முமாக குறைந்த தன்னை நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரின் எண்ணிக்கை, தற்போது 1% ஆகியுள்ளதாம்.
உலகளவில்...
உலகளவில் 9% கடவுள் நம்பிக்கை குறைந்த மனிதர்கள் அதிகரித்துள்ளதாக இந்த சர்வே சொல்கிறது.
பாகிஸ்தானில்...
ஆனால் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மனிதர்களிடையே மத நம்பிக்கை அதிகரித்துள்ளதாம். அதுவும் 6%.
அர்ஜெண்டினாவில்...
தற்போதைய போப்பின் சொந்த நாடான அர்ஜெண்டினாவிலும் இதே கதைதானாம். அங்கு 8% மத நம்பிக்கையாளர்கள் குறைந்துள்ளனராம்.
சீனாவில் தான் அதிகம்...
இருப்பதிலேயே சீனாவில் தான் சரிபாதியாக, அதாவது 50% பேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்களாம். உலக அளவில் இது 13% ஆகும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!