இந்தியர்கள் விவாகரத்து மலேசியாவில் அதிகரிப்பு
மலேசியாவில் வாழும் இந்தியர்களிடையே விவாகரத்து செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சமூக பிரச்னைகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. மலேசியாவில் இந்தியர்கள் சிறுபான்மை சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடையே விவாகரத்து செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, தமிழர்கள் சங்க தலைவர் எஸ்.வி.லிங்கம் கூறுகையில், ‘''தற்போது ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
இது சில ஆண்டுகளுக்கு முன் வெறும் 200 ஆக இருந்தது. வெற்றிகரமான மணவாழ்க்கையை அமைத்து கொள்ள உதவியாக திருமண வாழ்க்கை குறித்த கட்டாய கல்வியை தம்பதிகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு மலேசிய இந்து சங்கம் போன்ற மத அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டும்'' என்றார். ''கணவன், மனைவி இடையே புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாமல் போனதே விவாகரத்து அதிகரித்ததற்கு முக்கிய காரணம்'' என்று மலேசியாவிலிருந்த வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!