Tuesday, June 4, 2013

உழைக்கும் 'அம்மா'க்கள் அமெரிக்காவில் அதிகம்: ஆய்வு


உழைக்கும் 'அம்மா'க்கள் அமெரிக்காவில் அதிகம்: ஆய்வு


அமெரிக்காவில் 10ல் 4 வீடுகளில் பெண்கள்தான் அதிக சம்பளம் ஈட்டுவோராக உள்ளனராம். கருத்துக் கணிப்பு ஒன்று இதைத் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இப்போது பெண்களின் நிலை வெகுவாக மேம்பட்டுள்ளதாம். குறிப்பாக குழந்தைப் பேறுக்குப் பி்னனர் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். முன்பை விட பெண்கள் இப்போது அதிக வருவாய் ஈட்டுவோராக உள்ளனராம். அவர்களின் நிலை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாம்.

பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களில் பெண்கள்தான் அதிக வருவாய் ஈட்டுவோராக உள்ளனராம். அல்லது பெண்கள்தான் சம்பாத்தியம் செய்பவர்களாக உள்ளனராம். உழைக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்திருப்பதையே இது காட்டுவதாக சொல்கிறது இந்த ஆய்வு.

மகளிர் மட்டும்... 


1960ல் உழைக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 11 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மனதில் உறுதி வேண்டும்... 


பல வீடுகளில் சிங்கிள் மதர்களாக பெண்கள் வருவாய் ஈட்டி குடும்பத்தைக் காக்கிறார்களாம். அதாவது கணவர் துணை இல்லாமல். பல வீடுகளில் கணவர்களை விட மனைவியரே அதிகம் ஈட்டுகின்றனர். பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

ஆவதும் பெண்ணாலே... 


அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் உழைக்கும் தாய்மார்கள் குறித்த கருத்தோட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லையாம். பலர், இதெல்லாம் நல்லதற்கில்லை என்று கருதுகிறார்களாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது... 


இதுகுறித்து பியூ ஆய்வுமையத்தின் துணை இயக்குநர் கிம் பார்க்கர் கூறுகையில், இது அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களில் ஒரு பகுதியாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அமெரிக்க குடும்பச் சூழல் தற்போது வெகுவாக மேம்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

பாரதி கண்ணம்மாக்கள்... 


பெண்களின் நிலை வெகுவாக மாறியுள்ளது. அதேசமயம், திருமணங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பல தாய்மார்கள் குடும்பங்களையும் கவனித்துக் கொண்டு வேலைக்குப் போவதையும் சரியாக சமன் செய்கிறார்கள்.

பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... 


கல்வியறிவும் பெண்களிடையே அதிகரித்துள்ளது. இளநிலை பட்டங்களைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துள்ளது. அமெரிக்க உழைப்போரில் 47 சதவீதம் பேர் பெண்கள் என்பது முக்கியமானது.

நீ பாதி... நான் பாதி... 


மேலும் முக்கியமாக, சமீப காலமாக பல்வேறு துறைகளில் குறிப்பாக கட்டுமானம், உற்பத்திப் பிரிவில் ஆண்கள் பலர் வேலையிழந்தனர். இந்தத்துறைகளில் பெரும்பாலும் ஆண்களே அதிகம் உள்ளதால், ஆண்களின் வருவாய்க்குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வேலையிழந்த ஆண்களின் மனைவிமார்கள் அதிக அளவில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதேபோல ஆசிரியர்கள், நர்ஸ்கள், நிர்வாகப் பணிகள் ஆகியவற்றில் பெண்களே அதிகம் உள்ளதும் பெண்களின் உயர்வுக்கு இன்னொரு காரணம்.

புதுமைப்பெண்கள்... 


இப்படி வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்தாலும், திருமணம் செய்வோரின் எண்ணிக்கை மறுபக்கம் குறைய தொடங்கியுள்ளதாம். மேலும் விவாகரத்தும் அதிகரித்துக் கொண்டு போகிறது. இதனால் சிங்கிள் மதர்கள் எனப்படும் பிள்ளைகளுடன் தனியாக வசிக்கும் தாய்மார்கள் அதிகரித்துள்ளனர்.

அம்மானா சும்மாவா... 


18 வயதுக் குழந்தைகள் உள்ள 13.7 அமெரிக்க வீடுகளில் 5.1 மில்லியன் அதாவது 37 சதவீதம் பேர் திருமணமாகி குடும்பமாக இருப்பவர்கள். 8.6 மில்லியன் பேர் அதாவது 63 சதவீதம் பேர் சிங்கிள் மதர் எனப்படும் ஒற்றைத் தாய்மார்கள்.

அதிக முட்டுக்கட்டைகள்.... 


அமெரிக்கர்களில் 79 சதவீதம் பேர் பெண்கள் வேலை பார்க்கக் கூடாது என்று கருதுகிறார்களாம். 21 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் வேலை பார்ப்பது நல்லது என்று சொல்லியுள்ளனர்.

யோசிங்க பாஸ் நன்னா இருந்து யோசிங்க !!! அமெரிக்க மட்டுமில்ல நம்ம நாட்டில கூட  இது தன இப்போதைக்கு உண்மை

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!