ஆஸ்திரேலிய குடியேற்றத்தில் இந்தியர்களே முதலிடம்
ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் பிரெண்டன், ''2011,12ல் ஆஸ்திரேலிய குடியேற்ற மனப்பாங்கு'' என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டார். அதில் உள்ள விவரம்: கடந்த 2011,12ம் ஆண்டில் 29,018 இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேறியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 12.7 சதவீதம் அதிகமாகும்
.
அதே சமயத்தில் சீனர்கள் குடியேற்றம் 29,546 என்ற எண்ணிக்கையிலிருந்து 25,509 ஆக குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேறுவதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிகம் பேர் குடியேறும் முதல் 10 நாடுகளில் 7 நாடுகள் ஆசியா கண்டத்தில் உள்ளன. 1996 முதல் 2011 இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து 60 லட்சத்தை எட்டியுள்ளது. இது ஆஸ்திரேலியாவிலேயே பிறந்தவர்களின் எண்ணிக்கையை விட இருமடங்குக்கும் அதிகமாகும்.
நன்றாக படித்த திறமைசாலிகள் இங்கு குடியேறுவதை அரசு ஆதரிக்கிறது. அத்தகையவர்கள் அதிகமாக வந்தால் நாட்டின் ஊழியர் திறன் அதிகரிக்கும். 2011,12ம் ஆண்டில் 13,700 பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அகதிகளை காப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு உள்ள அக்கரையை காட்டுவதாக இது அமைந்துள்ளது. உலகில் அதிகளவில் மறுகுடியமர்வு நடைபெறும் டாப் 3 நாடுகள் வரிசையில் கனடா, அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!