பனிக்கால உறக்கத்தை முடித்த ஆமைகள்
சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள திசினோ மாநிலத்தில் திடீரென்று வெப்பநிலை உயர்ந்ததனால் பனிக்கால உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆமைகள் வெயில் காலம் பிறந்துவிட்டதாக விழித்துக் கொண்டன.
பெலின்சோனாவில் உள்ள விலங்குப் பாதுகாப்புக் குழு(SPAB), இந்த ஆமைகள் அடுத்த சில நாட்களில் பனி வரும்போது திரும்பவும் பழைய இடங்களுக்குப் போய் உறங்க முடியாமல் திண்டாடும்.
எனவே இவற்றைக் தரையில் உலாவவிடாமல் மீண்டும் உறங்கப்போகுமாறு திருப்பியனுப்ப வேண்டும் என்று தெரிவித்தது.
திசினோவின் பல பகுதிகளில் வெப்பநிலை 24 டிகிரியை எட்டியது. கடந்த நான்கு நாட்களாக இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது.
அதிகரித்துவரும் வெப்பம் திசினோவில் வெயில் காலம் வந்துவிட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது.
இதனால் பல ஆமைகள் விழுத்துக்கொண்டு நடமாடத் தொடங்கிவிட்டன.
இவற்றை நடமாட அனுமதிக்கக் கூடாது, பனிக்கால உறக்கம் குறைவுபட்டால் ஆமைகளின் உடல்நலம் பாதிக்கும்.
அதே சமயம் அடுத்து பனி பெய்தால் அந்தப் பனியின் குளிர் தாங்காமல் இந்த அமைகள் செத்துவிடும். எனவே தரையை ஆழமாகத் தோண்டி அவற்றை அந்தப் பள்ளத்துக்குள் அனுப்பிவிட்டால் அவை மீண்டும் உறங்க ஆரம்பிக்கும் என்று விலங்குப் பாதுகாப்புக்குழு அறிவுறுத்தியது.
ஆமைகளைச் செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் இந்தக் குழுவுடன் தொடர்பு கொண்டு இந்த ஆமைகளின் உறக்கம் கலைந்தது குறித்து விபரம் கேட்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!