Wednesday, January 9, 2013

கோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்!

கோவையில் இன்று 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடல்! ஹோட்டல்களை மூட அழைப்பு!!


மின்வெட்டை கண்டித்து கோவையில் இன்று இரண்டு லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்படுகின்றன. டெக்ஸ்டைல், இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல், பம்புசெட், மோட்டார், பவுண்டரி, லேத் ஒர்க்ஷாப், நகை பட்டறை, விசைத்தறி என பல்வேறு துறைகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை காரணம் காட்டி சென்னையில் தினம் 2 மணி நேரம் மின்வெட்டு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால், கோவையில் தொழில்கள் முடங்கி போயுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்டுவந்த கோவையில், 70 சதவீதத்துக்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சீராக மின்வெட்டு அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் மின்தட்டுப்பாடு பிரச்னைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறுகிறது.

கோவையில் சேம்பர், கொடிசியா, சீமா, சைமா, கவுமா, காஸ்மோபேன், டாக்ட், காட்மா, கோப்மா, சியா உள்ட்ட 35க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இப்போராட்டத்தில் குதிக்கின்றன.

இன்றைய தினம், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றை மூடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், இன்று ஒருநாள் மட்டும் கோவை யில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!