ஆஸ்திரேலியாவில் 130 இடங்களில் தீப்பிடித்தது! 20,000 ஹெக்டேரில் பரவியது!
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக, பல இடங்களில் தீப்பிடித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா கண்டிராத அளவில், ஒரே நேரத்தில் 130 இடங்களில் தீப்பிடித்து பரவி வருகிறது. இவற்றில் 40 இடங்களில் தீ அணைக்க முடியாத அளவுக்கு பெரிதாகி உள்ளது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
ஆஸ்திரேலியாவின் மிக பாபுலர் மாநிலம் நியூ சவுத் வேல்ஸில் நேற்று மட்டும் 130 இடங்களில் தீப்பிடித்து எரிந்தது. டஸ்மேனியாவில் இடம்பெற்ற தீப்பிடிப்பால், 20,000 ஹெக்டேர் ஏரியாவுக்கு தீ பரவி நாசம் செய்தது. இவை பெரும்பாலும் காட்டு பகுதிகள்தான்.
நேற்று வெப்பநிலை சில பகுதிகளில் 45C (113F) அளவுக்கு உச்சத்துக்கு சென்றது. அடுத்துவரும் தினங்களும், வெப்பநிலை அதிகமான தினங்களாகவே இருக்கும் என காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பல இடங்களில் தீ பரவுவதற்காகன வாய்ப்பு அதி உச்ச நிலையில் உள்ளது. எனவே இவ்விடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்குக்கு அருகேயிருந்த பிரபலமான சுற்றுலா விடுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜூலியா கில்லார்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.
தீ காரணமாக நாட்டின் வனப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!