Thursday, January 10, 2013

சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!


சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!


ரியாத்: சவூதி அரேபியாவில் 4 மாத குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஸானா சவூதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் மீது 2005-ம் ஆண்டு 4 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு சார்பில் ரிஸானாவின் வயது 17தான் என்பதால் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சவூதி அரசர் அப்துல்லாவுக்கும் ரிஸானாவின் பெற்றோர் கருணைமனு அனுப்பியிருந்தனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸானாவுக்கு கருணை காட்ட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ரிஸானாவின் தலையை துண்டித்து சவூதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!