சேலம் அருகே மலைப்பகுதி பள்ளிகளுக்கு கழுதைகளில் செல்லும் பாடப் புத்தகங்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மலையில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பாலமலை ஊராட்சி. மலை பகுதியான இந்த ஊராட்சியில் ராமன்பட்டி, திண்ணம்பொதி, கடுக்காமரத்துக் காடு உட்பட 33 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 5 தொடக்கப் பள்ளிகளும் ஒரு நடுநிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. எனவே கழுதைகள் மூலம் தான் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பாலமலை ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடபுத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. இவற்றை கொளத்தூரில் இருந்து மலை பகுதியில் அமைந்துள்ள பாலமலை ஊராட்சிக்கு கழு தைகள் மூலம் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதனிடையே, மலை மீதுள்ள இப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!