இன்றைய நாளின் அதி உச்ச சொகுசு பஸ்
இந்தவாரம் ஜெர்மனி டியூசல்டொஃப் நகரில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில், பார்வையாளர்களை வாவ் என்று ஆச்சரியப்பட வைத்த வாகனம் இதுதான். ‘சக்கரத்தில், 40 அடி நீள சொகுசு மாளிகை’ என்று விளம்பரப் படுத்தப்பட்ட பஸ்ஸை நீங்கள் பார்க்க வேண்டாமா?
இந்த பஸ் முற்று முழுதான சொகுசு பயண அனுபவத்தை தருவதுடன் அதி உச்சமாக இதில் உங்களது காரையும் பார்க் பண்ணும் வசதி உள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள் முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிகப்பு நிறமாக தெரிவது கார்.
பெராரி அல்லது லம்போகினி கார்களை நிறுத்துவதற்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது
பஸ்ஸின் கார்கோ கம்பார்ட்மென்டை பாருங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள தகடு போன்ற அமைப்பு தரைக்கு வருகிறது. அதில் காரை ஏற்றிவிட்டு, பஸ்ஸில் உள்ள சுவிட்சை தட்ட வேண்டியதுதான். கார் உயர்ந்து, பஸ்ஸிக் கார்கோ கம்பார்ட்மென்டுக்குள் போய்விடுகிறது.
உட்புற ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். போட்டோவில் உள்ள ஸ்டைல், மிக அகலமான பெட்ரூம், மற்றும் வைடு ஸ்கிரீன் டி.வி.யுடன் வருகிறது.
பிரிட்ஜ், மற்றும் பிரீஸருடன் கூடிய சொகுசு கிச்சன் பஸ்ஸிலேயே உள்ளது. போதியளவு ஸ்டோரேஜ் வசதியும் உண்டு. ஓடும் பஸ்ஸில் வெளியே காட்சிகளை பார்த்தபடி சமையல் செய்யலாம்.
டிரைவர் சீட்டுக்கும், கிச்சனுக்கும் இடையே சிட்டிங் ஏரியாவும், டி.வி.யும் இருப்பதை பாருங்கள். டிரைவிங் சீட்டும் அட்டகாசமாகவே உள்ளது.
விருந்தினர்களை உபசரிக்கும் பகுதி இது. லெதர் சீட்கள். விலையுயர்ந்த மர (wood) பினிஷிங் என்று அட்டகாசமாகவே உள்ளது.
பாத்ரூம். சிறப்பு டைல்ஸ், கோல்ட் கலர் டப். இங்கும் போதிய ஸ்டோரேஜ் வசதி உள்ளது. நம்மூரில் ஏழைகள் ரோட்டில் குளிக்கிறார்கள். இந்த பஸ்ஸில் கோடீஸ்வரர்களும் ரோட்டில்தான் குளிக்கிறார்கள், இல்லையா?
இது மற்றொரு ஸ்டைல் கிச்சன். பாரம்பரிய லுக் விரும்பும் ஆட்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். ட்ராடிஷனல் வீடுகளில் உள்ளதுபோல wooden floors, wooden work tops என்று, ஹோம்லியாக இருக்கும் ஆப்ஷன் இது.
பாரம்பரிய ஸ்டைலை தேர்ந்தெடுத்தால், அதன் சிட்டிங் ஏரியா இப்படித்தான் வரும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!