Wednesday, September 26, 2012

விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா


விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா





உக்ரைனிடம் இருந்து சீனா வாங்கிய 60,000 டன் எடை கொண்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலை நேற்று கடற்படையில் சேர்த்துள்ளது. கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள சில குட்டித்தீவுகள் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், தங்களுக்குதான் சொந்தம் என்று ஜப்பான் கூறி வருகிறது. இந்த தீவின் உரிமையை வைத்திருந்த ஜப்பானியரிடம் இருந்து அதை வாங்கிவிட்டதாகவும், அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் சீனா , ஜப்பான் இடையே இந்த தீவு பிரச்னையால் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனா முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலை நேற்று கடற்படையில் சேர்த்தது. இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. பின்னர் அது சீனாவுக்கு கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. போர்க்கப்பலுக்கு, ‘லயோனிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த சீனாவின் மாகா ணம் லயோனிங். 1945ம் ஆண்டு இது ஜப்பானிடம் இருந்து விடுதலையடைந்து சீனாவுடன் சேர்ந்தது. அதன் பெயரையே, விமானந்தாங்கி போர்க்கப்ப லுக்கு சீனா வைத்துள்ளது. இது ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கை என்று கூறப்படு கிறது. 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த லயோனிங் போர்க்கப்பல் சீனாவின் கடற்படைக்கு பெரும் பலம் சேர்க்கும். இதில் 33 போர் விமானங்களை நிறுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

குறிப்பு : இதில் செலவிட்ட பணம் வேஸ்ட்” என்பதே ராணுவ வட்டாரங்களின் காமென்ட்

காரணம் இதில் ஏற்றி இறக்கத்தக்க விமானங்கள் சீனாவிடம் இல்லை, இனிமேல் தான் வாங்கவேண்டும். அடுத்தது வியட்நாமின் விமானப் படையில், 230 லேன்ட் பேஸ்டு போர் விமானங்கள் உள்ளன. ஏதாவது ஒரு தகராறு ஏற்பட்டால், இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு சமாதி கட்ட வியட்நாம் விமானங்களால் முடியும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், சீனாவால் தமது முகத்தை எங்கேயும் கொண்டுபோய் வைக்க முடியாது! அருகிலுள்ள குட்டி நாடுகளை மிரட்டுவதற்கு இக்கப்பல் பயன்படலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!