Wednesday, September 25, 2013

ஃபேஸ்புக்கே கதின்னு கிடந்தா நீங்க 'சஞ்சய் ராமசாமி' ஆயிருவீங்களாம்...!

ஃபேஸ்புக்கே கதின்னு கிடந்தா நீங்க 'சஞ்சய் ராமசாமி' ஆயிருவீங்களாம்...! 


ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கஜினி சூர்யா போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படுமாம். 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் மற்றும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆய்வு செய்தது. 

அதில் ஒரு குறிப்பிட்ட வகையான சமூக வலைதலங்களை அதிகமாக பயன்படுத்தும்போது நம் மூளையில் மிகக் குறைவான தகவல்களை பதிவாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் 

ஃபேஸ்புக்கே கதி என்று கிடந்தால் கஜினி போன்று ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் ஏற்படும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்டர்நெட் மோகம் 

இன்டர்நெட் மோகம் என்பது முதன்முதலாக சிகரெட் பிடிக்கும்போது கிடைக்கும் உணர்வு போன்று ஆகும். இன்டர்நெட்டுக்கு அடிமையாக வேண்டாம்.

ரியல் வாழ்க்கைக்கு வாங்க 

உங்களின் நிஜ வாழ்க்கையை வெர்ச்சுவல் வாழ்க்கை ஓவர்டேக் செய்துவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோக்களை அப்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு நிஜ வாழ்க்கை என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா.

திட்டமிடல் 

அடுத்த முறை ஆன்லைன் போகும் முன்பு என்ன தேவை என்பதை குறித்து வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

அடிமையாகிவிடாதீர்கள் 

இன்டர்நெட், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடாதீர்கள்

நரம்பு பிரச்சனை 

இன்டர்நெட் மற்றும் ஃபேஸ்புக்கே கதி என்று இருப்பதால் நரம்பு பிரச்சனைகளும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் 

ஃபேஸ்புக்கில் ஒரு அப்டேட் வந்தால் உடனே உங்கள் ஸ்மார்ட் போன் உங்களுக்கு தெரிவித்துவிடும். நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஸ்மார்ட் போன் நோட்டிபிகேஷன்களை தவிர்க்கவும்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!