’செக்ஸ் ஜிகாத்’: சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்...
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது.
போராளிகளுக்கு இன்பம்
இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். விரும்பிச் செல்லும் பெண்களும் தண்டனைக்குள்ளாவர்.
தடுக்க அரசு தீவிரம்
இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெண்களுக்காக விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு தனிக் குழுவும் ஏற்படுத்தப்படும் என்றார்.
குறைந்தது 20 பேருடன்
சிரியாவுக்குச் செல்லும் பெண்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 20 முதல் அதிகபட்சம் 100 போராளிகளுக்கு இன்பம் கொடுப்பதாக பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.
கர்ப்பிணிகளாக ரிட்டர்ன்
இந்த செக்ஸ் ஜிஹாத்தை முடித்துக் கொண்டு திரும்பும் பெண்களில் 99 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாகவே திரும்பி வருகின்றனராம். இதுவரை எத்தனை பேர் இந்த செயலில் பெரும்பாலும் இளம் பெண்களே ஈடுபடுத்தப்படுகிறார்களாம்.
இதுவரை எத்தனை பேர்
இதுபோன்று ஈடுபட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் துனிஷிய அரசிடம் இல்லையாம்.
நூற்றுக்கணக்கான பெண்கள்
இருப்பினும் இதுவரை நூற்றுக்கணக்கான துனிஷிய பெண்கள் சிரியாவுக்கு இதுபோல செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல நூறு பெண்கள் காத்திருக்கிறார்களாம்.
செக்ஸ் அவலம்
இந்த செக்ஸ் அவலத்தைத் தடுக்க துனிஷிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
புனிதப் போர்கள்...
கடந்த 15 ஆண்டுகளில் துனிஷியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, துருக்கி, லிபியா நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களிலும், புரட்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!