Wednesday, September 25, 2013

பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது!

பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது! 


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 217 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு என்றும் உருவாகியிருக்கிறது. 

பலுசிஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியையும் அதிர வைத்தது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. 

22 கி.மீ ஆழத்தில் 

நிலத்துக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் நிலநடுக்க சேத விவரம் வெளியாகவில்லை.. 

80...90..பேர் பலி 

பின்னர் 80 பேர் பலி, 93 பேர் பலி என்று தகவல் இப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

217 பேர் 

பலி பாகிஸ்தானின் உள்துறை செயலர் ஆசாத் கிலானி தெரிவித்த தகவலின்படி மொத்தம் 208 பேர் பலியான அறிவிக்கப்பட்டது. 350 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இது தற்போது 217ஆக அதிகரித்துள்ளது. 


பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் 

தற்போதைய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

புதிய தீவு 

பலுசிஸ்தானின் கத்வார் கடற்பரப்பில் இந்த நிலநடுக்கத்தினால் புதிய தீவு ஒன்றும் திடுமென உருவாகியிருக்கிறதாம்.. 

முன்பும் உருவாகி மறைந்த தீவுகள் 

இதேபோல் முன்பு பலமுறை இதே பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போது இத்தகைய தீவுகள் உருவாவதும் சிறிது காலம் கழித்து அது தானாகவே மறைந்துபோவதும் நடந்துள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!