பெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்களாம் ஆண்கள்!
சிட்னி: உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை. ஆனால் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம்.
பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை சொல்லியிருப்பது ஒரு பெண் விஞ்ஞானிதான். அவரது பெயர் பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...
அழியத் தொடங்கி விட்டது ஆண் இனம்
உலகில் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான செய்திதான்.
ஏற்கனவே தொடங்கி விட்டது
ஆனால் இதுதான் உண்மை. இந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தியாகும்.
குரோமோசோம்கள் குறைகின்றன
பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.
100 ஜீன்கள் குறைந்து விட்டன
ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் 100 ஜீன்கள் மட்டுமே உள்ளன. காணப்படுகிறது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும்.
பெண்களுக்கு இரண்டு.. ஆண்களுக்கு
ஒன்று தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.
50 லட்சம் ஆண்டுகளுக்கு ஆம்பளைங்க இருப்பாங்களாம்
இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ்.
ஆண்களே உலகில் இல்லயென்றால்...
33 சதவீதம் கேட்டு போராட வேண்டி இருக்காது... ஆனால் நூறு சதவீதத்தை வைத்து என்ன செய்ய முடியும்?
உருவாகலாமோ விந்தணு வங்கிகள்...
டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!