பிரான்ஸ் அதிபருக்கு பரிசாக கொடுத்த ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்ட மாலி நாட்டவர்.. இன்னொன்று பார்சலா
பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே வுக்கு மாலி அரசு பரிசாக வழங்கிய ஒட்டகத்தை, அதைப் பராமரித்து வந்த குடும்பத்தினர் வெட்டி சமைத்துச் சாப்பிட்டு விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலி அரசு, பிரான்ஸுக்கு இன்னொரு ஒட்டகத்தை பரிசாக அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க நாடான மாலிக்கு வந்திருந்தார் ஹாலன்டே. அப்போது மாலி நாட்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக வந்திருந்த பிரெஞ்சுப் படையினரின் பணிகளை தொடங்கி வைத்து விட்டுப் போனார். அப்போது அவருக்கு மாலி அரசு சார்பில் ஒட்டகம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட ஹாலன்டே, போக்குவரத்து நெரிசல் மிக்க பாரீஸில், இந்த ஒட்டகத்தில் சவாரி செய்ய விரும்புவதாக விளையாட்டாக கூறினார். பின்னர் ஒட்டகத்தை தும்புக்டு என்றஇடத்தில் பராமரிப்புக்காக விட்டுச் செல்வதாக கூறி விட்டு பிரான்ஸ் திரும்பினார்.
அதன்படி தும்புக்டுவில் ஒரு குடும்பத்தார் பராமரிப்பி்ல் இந்த ஒட்டகம் வளர்ந்து வந்தது. அதை தினசரி நேரில் பார்த்து பிரெஞ்சு அதிகாரிகள் அதிபருக்கு அப்டேட் செய்து வந்தனர். இந்தநிலையில் அந்த ஒட்டகத்தை தற்போது அடித்துக் கறியாக்கி சாப்பிட்டு விட்டனர்.
இதனால் மாலி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பிரெஞ்சு அதிபருக்கு இன்னொரு நல்ல ஒட்டகத்தைப் பரிசாகஅளிக்கப் போவதாக மாலி அரசு அறிவித்துள்ளது. இந்த ஒட்டகத்தை நேரடியாக பாரீஸுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் மாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!