Thursday, April 11, 2013

ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றம் ஒப்புதல்

ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றம் ஒப்புதல்






ஓரினச்சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான உருகுவேயில் "ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள்" என்று கூறி அத்திருமணத்தை ஆதரித்து சட்டம் கொண்டுவரவேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான வாக்குகளுடன் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேல்சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், இன்னும் இரு வாரங்களில் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. கத்தோலிக்க கிறுஸ்தவ சபைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!