Thursday, April 11, 2013

சீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்


சீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்


சீனப்பேரரசர் காலத்து அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஒன்று ஏலத்துக்கு வந்தது. இளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் உதா நிறத்துடன் வரையப்பட்ட அந்த தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார். கடந்த வருடம் இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!