Friday, February 1, 2013

ராக்கெட் விபத்து: சாட்டலைட்டுடன் புறப்பட்ட 40 விநாடிகளில் கடலில் வீழ்ந்தது!

ராக்கெட் விபத்து: சாட்டலைட்டுடன் புறப்பட்ட 40 விநாடிகளில் கடலில் வீழ்ந்தது!



அமெரிக்க சாட்டலைட் ஒன்றை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் புறப்பட்ட ராக்கெட் ஒன்று, புறப்பட்ட சில விநாடிகளிலேயே செயல்படாமல் கீழே வீழ்ந்தது. இதையடுத்து, அமெரிக்க சாட்டலைட்டும் பசிபிக் கடலில் வீழ்ந்தது.

உக்ரேனியன் தயாரிப்பு Zenith-3SL ராக்கெட், பசிபிக் கடலின் மிதக்கும் ஏவுதளம் (floating platform) ஒன்றில் இருந்து, அமெரிக்காவின் இன்டெல்சாட்-27 சாட்டலைட்டை விண்வெளிக்கு கொண்டுசெல்ல புறப்பட்டது. புறப்பட்டு சுமார் 40 விநாடிகளில் ராக்கெட் செயலிழந்தது. உடனடியாகவே, சாட்டலைட்டுக்கு தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த தொடர்பு இழக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க சாட்டலைட் பசுபிக் கடலில் மூழ்கிவிட்டது.

ஆரம்ப தரவுகளின்படி, ராக்கெட்டின் இஞ்சின் ஏதோ காரணங்களுக்காக ஆட்டோமேட்டிக்காக நின்றுவிட்டது. அதற்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!