கொழும்பில் ஹெலிக்கொப்டர் மூலம் பீரிஐ பக்ரீரியாவைத் தெளிக்க திட்டம்
கொழும்பு நகர்ப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பீரிஐ (BTI) பக்ரீரியாவை ஹெலிக்கொப்டர் மூலம் தெளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று கியூப தூதுவர் இந்திரா லொஜேசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலிலே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
இத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி கோருவதற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓரிரு தினங்களில் அவ் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கொழும்பு நகர்ப்பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதுடன், டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாலே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!