பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 3 அணைகளை கட்டுகிறது சீனா: இந்தியா கவலை
பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில் யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது.
சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அணை கட்டுவது குறித்து அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது.
சீன வெளியுறவு அதிகாரி ஹாங் லீ குறிப்பிடுகையில், இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றில் நீரின் வேகம் குறையாது.
தற்போது கட்டப்பட உள்ள அணையிலிருந்து நாங்கள், மின்சாரம் தயாரிக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!