மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
மிஸ்டு கால் செய்வதற்கும், மண்டபத்தின் வெளியே செருப்பை விட்டு விட்டு வருவதற்கும் என்ன ஒற்றுமை? யாரும் எடுத்து விடக் கூடாதே என்ற டென்ஷன்தான். இப்படி மிஸ்டு கால் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலா வருகின்றன. மிஸ்டு கால் கொடுப்பவர்களை ஏதேதோ சொல்லி கேலியும், கிண்டலும் செய்கிறோம். ஆனால், மிஸ்டு கால் கொடுப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே கூறுகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் அந்த நல்லவர்களை இனிமேல் கிண்டல் செய்யாதீர்கள்... இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96 சதவீதம் பேர் மிஸ்டு கால் பார்ட்டிதான். இதில் சிக்கனமான பெற்றோரும் உண்டு. பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால். ஷாப்பிங் முடித்து விட்டு, கார் டிரைவரை அழைக்க ஒரு மிஸ்டு கால். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வங்கிகள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள், அரசியல் கட்சிகளும் இந்த மிஸ்டு கால் முறையை பயன்படுத்தி ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துகின்றன.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை வழங்குகின்றன.மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதே போல், மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட மிஸ்டுகால் முறையை பயன்படுத்துகின்றன என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!