கிஸ் பண்ணலாம்.. ஊர் சுற்றலாம்.. கழற்றிவிடலாம் இளம்பெண்களுக்கு தேவையான பாய் பிரெண்ட்ஸ் ‘வாடகைக்கு’
சீனாவில் அடுத்த மாதம் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை விஷயமாக வெளி இடங்களில் தங்கி உள்ள இளம்பெண்கள், பெற்றோர் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்போது, 'எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறாய்', 'யாரையாவது காதலிக்கிறாயா?', 'உன்னோட பாய் பிரண்ட் யாரு?' போன்ற வழக்கமான கேள்விகளை கேட்கின்றனர்.
பலர் தங்கள் காதலர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். காதலன் இல்லாமல் தனித்து வாழும் இளம்பெண்கள் பலர், பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ, சீன ஆன்லைன் வி'வாடகைக்கு வாலிபர்கள் சேவை' என்று விளம்பரம் தந்துள்ளது.
இதன்படி, தேவைப்படுவோருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாலிபரை உடன் அனுப்பி வைப்பார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று 'பாய் பிரண்ட்' என்று அறிமுகப்படுத்தலாம். வாலிபருடன் ஷாப்பிங் செல்லலாம். விரும்பினால் முத்தம் கொடுத்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரேட். பெற்றோருடன் சந்திப்பு முடிந்த பின், வாலிபரை கழற்றி விட்டு விடலாம். அதன்பின் அவரால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இதற்கு கேரன்டி தருகிறது நிறுவனம். இந்த அவசர 'பாய் பிரண்ட்' அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிரஸ் மற்றும் தேவையான பொருட்களை இளம்பெண்கள் வாங்கி தரலாம். போக்குவரத்து, உணவு, தங்குமிடம் எல்லாம் பெண்களே ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இந்த சேவையில் ஈடுபட, பல இளம் வாலிபர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். சீனாவில் மட்டும் 18 கோடி இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பெற்றோரை திருப்திப்படுத்த இந்த வாடகை வாலிபர் சேவையை பயன்படுத்தி கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு பீஜிங் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் லின் ஜியூயுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இது நல்ல ஐடியா இல்லை. திருமணம் பற்றிய கேள்விகளில் இருந்து தப்பிக்க பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட்டை வாடகைக்கு எடுத்தது பெற்றோருக்கு தெரிந்து விட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்' என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!