நண்டு, இரால் போன்ற ஓடுடைய நீர் விலங்குகள் தமது ஓட்டிலேயே வலியை உணருகின்றன என்பதற்கு கூடுதல் தடயங்கள் கிடைத்துள்ளன.
நாம் சாப்பிடும் வகையை ஒத்த ஒரு கரை நண்டு வகைகள் தமது ஓட்டின் மேல் மின்சாரம் பாயும்போது அதனை உணருகின்றன என்றும், மின்சாரம் வருகிறது என்று தெரியும் இடங்களை அவை தவிர்க்கப் பார்க்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
வலியை உணரும் தருணங்களில் இரால்களுக்கும் நண்டுகளுக்கும் தமது இயல்பை மாற்றி்க் கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்திருந்தனர்.
பத்துக் கால்கள் கொண்ட ஓடுடைய கடல் பிராணிகளான சிங்க இரால்களும்கூட இதேபோன்ற இயல்பு மாற்றங்களை வலி ஏற்படும் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொடுக்கு
அவை வலியை உணரும் என்ற புரிதலுடன் அவற்றைக் கையாளுகிற போக்கு நம்மிடையே இல்லை என்றும் இவ்வகை விலங்குகளை அனாவசிய வலியிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகளும் இல்லை என்று பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல்வுட் சுட்டிக்காட்டுகிறார்.
தேவைப்படாத சில நண்டுகள் வலையில் மாட்டிக்கொண்டால், அவற்றின் கால்களையோ, கொடுக்கையோ உடைத்து மீண்டும் அவற்றைக் கடலில் எறிவது போன்ற வழக்கங்கள் மீனவர்களிடையே இருந்துவருவதாக அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!